அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.
துல்சா நகருக்கு அருகே நடைபெற்ற வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான நிகழ்வின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 5 மாதங்களில் 640 குழந்தைகள் உட்பட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
Comments