நீட் தேர்வால் அனைவருக்கும் சம வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
நீட் தேர்வால் அனைவருக்கும் சம வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அத்தேர்வு வந்தபிறகு தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் மருத்துவக் கல்வியை பெறுவதாக கூறினார்.
நாமக்கலில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு நீட் தேர்வை 30 ஆயிரம் பேர் அதிகம் எழுத உள்ளதாகவும், மாணவர்கள் நீட் தேர்வை கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
Comments