கேரளத்தில் வழக்கத்திற்கு முன்பே தொடங்கிய தென்மேற்குப் பருவமழை..!
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வழக்கமாகக் கேரளத்தில் ஜூன் முதல் நாளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்றும், இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Comments