ஜூன் 1-ம் தேதி மேற்கு வங்கத்தின் நியு ஜல்பைகுரியில் இருந்து டாக்காவுக்கு மூன்றாவது ரயில் சேவை தொடக்கம்.!
ஜூன் ஒன்றாம் தேதி மேற்கு வங்கத்தின் நியு ஜல்பைகுரியில் இருந்து டாக்காவுக்கு மூன்றாவது ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
கோவிட் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இந்த சேவை தொடங்க உள்ளது.
மைத்ரி எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முறையே மீண்டும் இன்றும் நாளையும் இயங்கத் தொடங்கும்.ஜூன் 1 ஆம் தேதி மூன்றாவது ரயில் புறப்படும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments