34 ஆண்டு சேவைக்குப் பின்னர் இந்திய கடற்படைக் கப்பலான கோமதிக்கு ஓய்வு
இந்திய கடற்பையின் போர்க்கப்பலான கோமதி 34 ஆண்டு கால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றது. லக்னோவில் கோமதி நதிக்கரையில் அருங்காட்சியகமாக இந்தக் கப்பல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இந்திய கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டு கப்பல் கட்டுமான ஆலையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. முதன் முறையாக மேற்கத்திய மற்றும் ரஷ்யாவின் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது.
இந்தக் கப்பல் கட்டும் அனுபவத்தால் இந்தியா இன்று ஏராளமான கப்பல்களை உள்நாட்டில் கட்டியிருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments