சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

0 3020
சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம் சிவஜோதி நகரைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான புருஷோத்தமன், அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்டர்நேஷனல் விடுதி அருகேயுள்ள விளையாட்டு மைதானம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான தர்ஷன், நண்பர்களுடன் பைக்கில் வீலிங் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட புருஷோத்தமன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து மாணவரிடம் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments