"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கலோல் என்ற இடத்தில் ஆலையைத் திறந்து வைத்து பேசிய அவர், இந்த தொழிற்சாலையில் ஒரு சாக்கு யூரியாவின் திறனை அழுத்தி ஒரு பாட்டிலில் நீர்மமாக அடைத்துவிட முடியும் என்றும் இதனால் போக்குவரத்துச் செலவு குறைவதுடன், சிறு விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த தொழிற்சாலை தினசரி ஒன்றரை லட்சம் பாட்டில் நானோ யூரியா தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, இந்த தொழிற்சாலையால் நிலம், நீர், காற்று மாசுபடாமல் காக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
Comments