ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கவுன்சிலர்களின் கணவர்கள்

0 3454
ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கவுன்சிலர்களின் கணவர்கள்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் தலைவர் மற்றும் பெண் கவுன்சிலர்களோடு அவர்களது கணவர்கள் பங்கேற்று ஆதிக்கம் செலுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபுவும் அவரது கணவர் பாபுவும் பங்கேற்றனர். அதேபோல் பெண் கவுன்சிலர்களோடு வந்த அவர்களது கணவர்கள் அவர்களை ஓரம்கட்டிவிட்டு, முன்வரிசையில் அமர்ந்து திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

திட்டப்பணிகள் குறித்து தலைவர் சுமதி எதுவும் பேசாத நிலையில், அவரது கணவரே பேசினார். கூட்டத்தின் இறுதியில் வருகை பதிவேட்டிலும், தீர்மானத்திலும் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்களிடம், ஒன்றிய அதிகாரிகளே கையெழுத்து வாங்கினர் என்றும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments