மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை
சென்னை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஐடி ஊழியரான பிரகாஷ், நேற்று அவரது திருமண நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி காய்த்ரி மற்றும் மகள் நித்யஸ்ரீ, மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோருக்கு மயக்கம் மருந்து கொடுத்துவிட்டு மரம் அறுக்கும் இயந்திர ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் அதே ரம்பத்தில் கழுத்தை அறுத்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதிக கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு பிரகாஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments