15 வயதான பெண் சிங்கத்தை கடித்த பாம்பு.. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு
ஒடிசா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் 15 வயதான ஆப்பிரிக்க பெண் சிங்கம் உயிரிழந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கா என்ற பெண் சிங்கம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உயிரியல் பூங்காவான ஒடிசாவின் நந்தன்கணன் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது.
கங்கா சிங்கத்தை பாம்பு கடித்த நிலையில் அதற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது.
Comments