கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பிலிருந்து கோபமாக வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களின் கேள்விகளால் ஆத்திரம் அடைந்து பேட்டியின் நடுவே வெளியேறினார்.
பெஷாவரில் செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், அண்மையில் அவர் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.
செய்தியாளர் ஒருவர் வன்முறை வீடியோவை திரையிட்டு அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டதும், பகையுணர்வைத் தூண்டிவிட அவர் முயற்சிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
Comments