நிலத்தகராறு காரணமாக அ.ம.மு.க நிர்வாகி மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை..!
திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க நிர்வாகியான சுப்பிரமணி, பாளையங்கோட்டையில் கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரை, பின் தொடர்ந்து வந்த மர்மக்கும்பல் ஒன்று வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாமென கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments