பாரத் பெட்ரோலியப் பங்கு விற்பனை முடிவு நிறுத்தி வைப்பு
பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளை வாங்க வேதாந்தா நிறுவனம் மட்டும் விருப்பம் தெரிவித்திருந்ததால், பங்கு விற்பனை முடிவை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53 விழுக்காடு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை அரசு வரவேற்றிருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பசுமை எரியாற்றல் துறையில் நிறுவனங்களின் ஆர்வம் ஆகியவற்றால் பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்கப் பெரும் நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை.
இரு நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில் திங் கேஸ் நிறுவனம் தனது விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
Comments