லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 7 வீரர்கள் உயிரிழப்பு

0 2874

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்.

பர்தார்பூரில் உள்ள முகாமில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.

காலை ஒன்பது மணி அளவில் அந்த வாகனம் தோய்ஸ் என்ற இடத்திற்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து தடுமாறி ஷியோக் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. சுமார் 60 அடி ஆழத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

எஞ்சிய வீரர்கள் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments