மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதி.!
ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகிய இருவர் பெண்ணை கொலை செய்து, அவர் அணிந்திருந்த ஆபரணங்களை நகைக்கடையில் விற்க முயன்றது விசாரணையில் உறுதியானது.
மற்ற 4 வடமாநில இளைஞர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மீனவப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments