திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையில் புகுந்த விஷப்பாம்புகள்.. பத்திரமாக பிடித்து பள்ளத்தாக்கில் விடப்பட்டது..!
திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் அறையிலும், தோட்டத்துறை நர்சரியிலும் புகுந்த விஷப்பாம்புகள் பிடிபட்டன.
திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்படும் பாண்டவா விருந்தினர் அறையில் நாகப்பாம்பு ஒன்றும், தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு ஒன்றும் இருந்தது.
உடனடியாக பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்தார். பின்னர், இரண்டு பாம்புகளையும் அவ்வாச்சாரி கோணாவில் உள்ள பள்ளத்தாக்கில் விட்டார்.
Comments