சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் -அமெரிக்கா
சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சீனாவுடன் பனிப்போர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
யுஎஸ்ஸின் சீனா குறித்த கொள்கை என்ற தலைப்பில் வாஷிங்டனில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள், கொள்கைகள், அமைதியையும் பாதுகாப்பையும் நாடும் அமைப்புகளை பலப்படுத்த அமெரிக்கா உறுதி கொண்டிருப்பதாக பிளிங்கென் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும் அதிபர் ஜோபைடன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தோ பசிபிக் கூட்டமைப்பு மற்றும் குவாட் மாநாட்டையும் பற்றி தமது பேச்சில் பிளிங்கென் குறிப்பிட்டார்.
Comments