"உக்ரைன் கதை முடிந்தது; போலந்து தான் அடுத்த இலக்கு" ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளர் ராம்ஜான் கடிரோவ் எச்சரிக்கை

0 3417

உக்ரைனுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டை தாக்க திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய ஆதரவாளரும் செசன்ய குடியரசு தலைவருமான ராம்ஜான் கடிரோவ் (Ramzan Kadyrov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைனின் கதை முடிந்து விட்டது எனவும் போலந்தின் மீது தாக்குதல் நடத்த ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அடுத்த 6 நொடிகளில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நிகழ்த்தி காட்டுவோம் என கூறியுள்ள ராம்ஜான் கடிரோவ், ஆயுதங்களுடன் போருக்கு தயாராக இருக்குமாறு போலந்தை எச்சரித்துள்ளார்.

மேலும், போலந்தில் ரஷ்ய தூதரர்கள் தாக்கப்பட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments