உக்ரைனில் போர் விமானங்களுக்கு என்ஜின் தயாரிக்கும் பட்டறைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.!

0 2397

உக்ரைனின் பழமைவாய்ந்த மோட்டார் சிச் நிறுவனத்தின் உற்பத்தி பட்டறைகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சிச் நிறுவனம் சோவியத் காலத்தில் இருந்து உக்ரைன் விமானப்படைகளின் போர் விமானங்களுக்கு என்ஜின்களை தயாரித்து கொடுத்து வந்தது. துல்லியமான நீண்ட தூர வான் மற்றும் கடல் அடிப்படையிலான ஏவுகணைகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments