டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்பு
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் சக்சேனாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
வினய் குமார் சக்சேனா, மத்திய அரசின் பல்வேறு குழுவில் பணியாற்றி உள்ளார்.
Comments