வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டது 250 வருட பழமையான ஆலமரம்.!
ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே இருந்த 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் வெற்றிகரமாக நடப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் 250 வருட பழமையான 16 டன் எடையுள்ள ஆலமரத்தை, நான்கு வழிச்சாலைப் பணிக்காக 2 கிரேன், 2 ஜே.சி.பி உதவியுடன் அப்பகுதி இளைஞர்கள் வேருடன் அகற்றினர்.
அகற்றப்பட்ட மரத்தை ஆலங்குளம் தொட்டியான்குளக்கரையோரத்தில் மீண்டும் நட்டு வைத்தனர். இந்த முயற்சியை மேற்கொண்ட ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Comments