கடனுக்குப் பொருள் தரவில்லை என்பதற்காக கோடாரியுடன் மளிகைக்கடைக்காரருக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

0 2366
கடனுக்குப் பொருள் தரவில்லை என்பதற்காக கோடாரியுடன் மளிகைக்கடைக்காரருக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

செங்கல்பட்டு அருகே கடனுக்குப் பொருள் தரவில்லை என்பதற்காக கோடாரியுடன் மளிகைக்கடைக்காரர் வீட்டு முன்பு நின்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமி, போலீசுக்குப் போன் செய்ததும் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

சாலவாக்கத்தில் கந்தசாமி - பரிமளா தம்பதி வீட்டிலேயே சிறியதாக மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ், அவ்வப்போது கடைக்கு வருவதும் கடனுக்கு பொருட்கள் வாங்கிச் செல்வதுமாக இருந்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் கடைக்குச் சென்றவருக்கு பரிமளா கடனாகப் பொருட்களை தர மறுத்துள்ளார்.

கோபத்துடன் அங்கிருந்து சென்ற சதீஷ், மது அருந்திவிட்டு போதையில் கையில் கோடரியுடன் மீண்டும் வந்துள்ளார். பரிமளா குடும்பத்தினர் கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்ட நிலையில், தன்னைப் பார்த்து அவர்கள் பயந்துவிட்டதாக எண்ணிய சதீஷ், வடிவேலு பாணியில் வெளியே வாங்கடா, வெளியே வாங்கடா என சலம்பினார்.

கந்தசாமி கடைக்குள் இருந்தபடியே போலீசுக்குத் தகவல் தெரிவிப்பதைப் பார்த்த சதீஷ், நைசாக அங்கிருந்து நழுவினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments