மகனின் உதவியால் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தந்தை...! 28 ஆண்டுகளுக்குப் பின் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூருவில் 28 ஆண்டுகளுக்குப் பின் மகனின் உதவியால், தந்தை 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
42 வயதான ரகமத்துல்லா என்பவர் 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முயற்சித்த போதும் தோல்வியே கிட்டியது.
இந்தநிலையில் ரகமத்துல்லாவின் மகன் முகம்மது பரான், வேலை முடிந்து தனது தந்தை வீட்டுக்கு வந்த பின் அவருக்கு பாடம் கற்றுக் கொடுத்தான். அதன் பலனாக 333 மதிப்பெண்கள் பெற்று தற்போது ரகமத்துலா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது தனது வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்றும், இதற்கு தனது மகனே காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரகமத்துல்லாவின் மகன் முகம்மது பரான் 98 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளான்.
Comments