ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமை 2019-ம் ஆண்டு யாசின் மாலிக்கை கைது செய்து, தேசவிரோத செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, யாசின் மாலிக்கிற்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை வலியுறுத்தியது.
இறுதியில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Comments