பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுள் நிறைவு.. 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியீடு!

0 2063

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 96 வயதான எலிசபெத் பிரிட்டன் ராணியாக கடந்த 1952-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார்.

பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் இவரது 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை ராயல் அரண்மனை நான்கு நாட்கள் விழாவாக ஜூன் மாதம் கொண்டாட உள்ளது.

அவரது பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

8.7 அங்குலம் விட்டம் கொண்ட இந்த நாணயத்தை செய்ய 400 மணி நேரம் ஆனதாகவும், இதன் மதிப்பு 18 ஆயிரத்து 772 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments