ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்.. கார்கீவ் பகுதியில் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்கள் மீட்பு..!

0 3221
ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்.. கார்கீவ் பகுதியில் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்கள் மீட்பு..!

ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்காக, போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்களை மீட்டனர்.

அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள், டி.என்.எ பரிசோதனை மூலம் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் வீரர்களின் சடலங்கள் அல்லது சிறை கைதிகளை பரிமாற்றி கொள்ள இவற்றை சேகரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments