வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
வடகொரியா, ஜப்பான் கடலை நோக்கி 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
சுனான் பகுதியில் இருந்து, அடுத்தடுத்து 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறியுள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் இதனை சந்தேகிக்கிறது.
தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை குறித்து ஆலோசனை மேற்கொண்டதோடு, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார்.
ஜோ பைடன் தென்கொரியாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாளைக்கு பிறகு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Comments