ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல 2 மாதங்களுக்கு முன்பு சதித்திட்டம்? உக்ரைன் உளவுத்துறை தலைவர் பரபரப்பு தகவல்
ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரியான கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.
இந்த சதியில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிகைக்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ, புதினைக் கொல்ல நடந்த சதி பற்றி தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். Caucasus கருப்புக் கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் உள்ள பிராந்தியம் ஆகும்.
இதில் ஆர்மேனியா, ஜார்ஜியா, ரஷ்யாவின் சில பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. காக்கசஸ் பிரதிநிதிகள் சிலரால் புதினைக் கொல்ல சதி நடந்ததாக உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments