சீனா - மியான்மர் இடையிலான சரக்கு ரயில் சேவை தொடக்கம்
சீனா - மியான்மர் இடையிலான சரக்கு ரயில் சேவை போக்குவரத்தை சீனா தொடங்கியுள்ளது.
உலகின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் சீனா, பல்வேறு நாடுகளுடன் வியாபாரத்தை பெருக்கி கொள்ளும் நோக்கில், சீனா - மியான்மர் இடையே ரயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளது.
தென்மேற்கு சீனாவின் Chongqing-லிருந்து புறப்படும் இந்த சரக்கு ரயில், இயந்திர உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வாகன பாகங்களை சுமந்து கொண்டு, 15 நாட்களில் மியான்மர் சென்றடையும். வியாபார நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையின் மூலம் பயண நேரம் வெகுவாக குறைவதாக சொல்லப்படுகிறது.
Comments