"சாமி ஏதாவது வேலை இருக்குதா"?-இளையராஜாவிடம் கேட்ட நடிகர் ரஜினிகாந்த்

0 5269

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டீங்க... சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரித்தார். அதற்கு, ‘‘தன் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே போவதாக இளையராஜா பதிலளித்தார்.

அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமிகுதியில் ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments