புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் பராமரிக்கப்படும் காய்கறி தோட்டத்தை பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன்.!
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் பராமரிக்கப்பட்டு வரும் காய் கனி தோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன.
கைதிகளின் மனநிலையை மாற்ற சிறை நிர்வாகம் அவர்களை மாடு வளர்ப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தியது.
சிறைச்சாலையை பார்வையிட்ட தமிழிசை சவுந்தராஜன், அங்கிருந்த மாடுகளுக்கு தீவனம் அளித்தார்.
Comments