ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி என விளம்பரம்.. ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய 4 இடங்களில் சோதனை..!

0 5131

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வட்டி வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பு ஆருத்ரா கோல்டு கம்பெனி பெயரில் அண்மையில் வெளியானது. இத்திட்டம் தொடர்பாக சென்னையில் அமைந்தகரை, வில்லிவாக்கம் உள்ளிட்ட 4 இடங்களிலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிளைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் நரேஷ், அப்படி ஒரு திட்டத்தையே ஆருத்ரா கோல்டு நிறுவனம் கொண்டு வரவில்லை எனவும் தங்களது பெயரில் யாரோ மோசடி செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments