வீடு கட்டுவதற்கு குழி தோண்டிய போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வீடு கட்டுவதற்கு குழி தோண்டிய போது கிடைத்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் என்று இவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் கடந்த 19ம் தேதி வீடு கட்டுவதற்கு குழி தோண்டிய போது கிடைத்த சிலைகள் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று அச்சிலைகளை திருவாரூர் அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் ஆய்வு செய்த போது இச்சிலைகள் அணைத்தும் ஐம்பொன்னால் ஆனவை என்று தெரிவித்தார்.
Comments