’இட்லி’ சாப்பிட முடியல ’பலூன்’ மாதிரி ஆயிட்டேன்..! நித்தியின் கஷ்ட காலம்..! முகம் காட்டாமல் பதிவிடுவது யார்?

0 22904
’இட்லி’ சாப்பிட முடியல ’பலூன்’ மாதிரி ஆயிட்டேன்..! நித்தியின் கஷ்ட காலம்..! முகம் காட்டாமல் பதிவிடுவது யார்?

தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என்றும் நீண்ட காலம் வாழ விரும்பினாலும், தான் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக நித்தியானந்தா தரப்பில் குழப்பமான பதிவு ஒன்று முக நூலில் வெளியிட்டப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தன்னை கேட்டுத்தான் சன்னே ரைஸ் ஆகும் என்று தனது சிஸ்யர்களிடம் சிக்ஸர் அடித்த நித்தியானந்தா, தற்போது படுக்கையில் இருந்து ரைஸ் ஆக முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த பிடதி ஆசிரமம் மற்றும் அஹமதாபாத் ஆசிரமங்களில் பெண் சிஷ்யைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகார் மற்றும் சிறுமிகளை கடத்திய வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நித்யானந்தா..!

நேபாளம் வழியாக வெளி நாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவான நித்தி, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக கூறி தினமும் கிரீன் மேட் உதவியுடன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிவந்தார். இந்த நிலையில் உணவு மற்றும் பழக்க வழக்கத்தால் உடல் நிலையில் பாதிப்புக்குள்ளாகி படுத்த படுக்கையான நித்தி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து அவரது முக நூலில் முகம் காட்டாமல் மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் வெளியிடப்பட்ட பதிவில் 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நித்தியானந்தா தற்போது மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை எனவும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நித்யானந்தாவின் பதிவில் தனது ஆசிரமத்தின் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது நான் பெரிய காற்று பலூனாக உணர்கிறேன். 'நான்', 'என்னுடைய' அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர்கிறேன், முழுமையான தனிமை - 'நான்' என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை, ஆனால் தனிமையின் சோர்வு அல்லது சலிப்பு இல்லை என்றும், இப்போது நான் பத்மாசனாவில் அமர்ந்திருக்கும் நேரத்தில், அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகின்றன, சுவாசமில்லை, விசித்திரமில்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் , நான் என் உடலை வலுவாக வைத்திருப்பதாக என்னை கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் சொல்கிறார் என்று குறிப்பிட்டுள்ள நித்தி,

இன்னும் சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன, மருத்துவ அறிக்கையின் படி என் உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் இன்னும் 1 இட்லி சாப்பிட வரல, 21 நிமிடங்கள் தூங்க வரல.

பனி மூடிய மலைகள் என்னை மிகச்சிறந்த ஆற்றல் மற்றும் உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பரம்பராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தேன், இந்த உலகில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பியதில்லை. நான் முற்றிலும் நிறைவடைந்துவிட்டேன்.

சமாதியைப் பற்றிய ஒவ்வொரு விவரம் குறித்தும் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதால் இதை அனுபவிக்கலாம் என அந்த பதிவில் குழப்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments