மின் வாகனங்கள் தீ விபத்திற்குள்ளானதற்கான காரணத்தை வெளியிட்ட டி.ஆர்.டி.ஓ

0 6712

பேட்டரி மற்றும் அதன் வடிவமைப்பில் இருக்கும் குறைபாடுகளால் மின் வாகனங்கள் தீவிபத்திற்குள்ளானதாக டி.ஆர்.டி.ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் மின்வாகனங்கள் அங்காங்கே தீப்பிடித்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டி.ஆர்.டி.ஓ.விடம் சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியது.

அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில், மின் ஸ்கூட்டர்களை சரிவர பரிசோதிக்காமல் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் தீ விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செலவினத்தை குறைக்க தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments