மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகள் மத்திய தரைக்கடலில் விடுவிப்பு
துனிஷியாவில் ஸ்ஃபேக்ஸ் நகர் துறைமுக பகுதியில் உள்ள ஆமைகள் பராமரிப்பு மையத்தினர், மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகளை மீட்டு சிகிச்சை அளித்து அவற்றை மத்திய தரைக்கடலில் விடுவித்தனர்.
ஆமைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வகையில் அவற்றின் கால்களில் சிறிய அடையாள பட்டை அணிவிக்கப்பட்டிருந்ததோடு, ஒரு ஆமையின் ஓட்டின் மீது செல்ஃபோன் அளவுள்ளா கண்காணிப்பு கருவியு பொருத்தப்பட்டிருந்தது. பெருந்தலை கடலாமைகள் சராசரியாக 45 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments