டெல்லியில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை... விமானப் போக்குவரத்து பாதிப்பு!

0 2388

தலைநகர் டெல்லியில் கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இரவில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்தது.

பலத்த காற்றும் வீசியது. கண்டோன்மென்ட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பங்களும் சாய்ந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இன்று அதிகாலையிலும் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்ததால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமானப் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நேர மாற்றத்தை அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில விமானங்கள் ஆக்ரா போன்ற அண்டை நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments