பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.!
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்ததில் இந்தியாவின் பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகரித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதையடுத்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று மேலும் பல சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி மேலும் குறைக்கப்படலாம் உர மானியம் போன்றவை அறிவிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நடவடிக்கைகளால் மேலும் ஒரு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இரட்டிப்பு நிதிச்சுமை ஏற்படும்.
Comments