உலக சுகாதார அமைப்பின் விருது - 10 லட்சம் இந்திய ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு கௌரவம்!

0 2651

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது .

உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடைபெற்றது. அதன்  தொடக்க அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் கிப்ரியசஸ் 6 விருதுகளை அறிவித்தார். இதில், இந்தியாவை சேர்ந்த 10 லட்சம் 'ஆஷா' தன்னார்வ பெண் தொண்டர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது.

கிராமப்புறங்களில் நேரடி மருத்துவ சேவை கிடைக்கவும், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் சளைக்காமல் பணியாற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments