கார் மேல் ஸ்டாண்டிங்கில் வந்தவருக்கு எண்ட் கார்டு... ஹீரோ என நினைத்தவரை பஞ்சராக்கிய போலீஸ்

0 2835

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பாணியில் 2 கார்கள் மீது நின்றபடி பயணித்த உத்தர பிரதேச மாநில இளைஞரை கைது செய்த போலீசார், இதற்காக அவர் பயன்படுத்திய 2 டொயோட்டா பார்சூனர் கார்களை பறிமுதல் செய்தனர்.

நொய்டாவை சேர்ந்த ராஜீவ் என்ற அந்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக பைக்கில் வீலிங் பன்னுவது உள்பட ஏராளமான ஸ்டண்ட்களை செய்து வந்துள்ளார்.

கோல்மால் திரைப்படத்தில் அஜய் தேவ்கனின் அறிமுக காட்சியை போல் 2 கார்கள் மீது நின்றபடி அவர் பயணித்த வீடியோ ஒன்று வைரலானது.

பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போல் வாகனம் ஓட்டியதற்காக ராஜீவை கைது செய்த போலீசார் அவரது பைக் மற்றும் 2 விலை உயர்ந்த பார்சூனர் கார்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments