தடைசெய்யப்பட்ட போதை மருந்தால் இருமல் டானிக்கை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்.!

0 4470

மராட்டிய மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட போதை மருந்தால் தயாரிக்கப்பட்ட 864 கிலோ இருமல் டானிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

தானே மாநில தேசிய நெடுஞ்சாலை வழியாக மும்பை நோக்கி வந்த காரை அவர்கள் சோதனையிட்ட போது, கோடின் எனும் போதை மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 8,640 Cough Syrup பாட்டில்கள் சிக்கின.

கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் அதனை வாங்க வந்த நபரை 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். போதைக்காக அருந்தப்படும் அந்த டானிக்கை மும்பையில் விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments