அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 1 முதல் தொடக்கம்.. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டம்..!
அயோத்தி ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிகள் வருகிற 1ந்தேதி முதல் தொடங்கும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா, இந்து சமய நாட்காட்டியின்படி வருகிற ஜூன் 1 ஆம் தேதி புனிதமான தேதி என்பதால், அன்றைய தினம் மிக முக்கிய கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்றார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கருவறையில் குழந்தை ராமர் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதிக்கும் வகையில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
Comments