இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்க்கு... பின்னால் உட்கார்ந்தாலும் இனி ஹெல்மெட் கட்டாயம்...சென்னை போலீஸ் போட்ட அதிரடி உத்தரவு
நாளை முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர், கடந்த ஐந்து மாதத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 98 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றார்.
மேலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்றும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டண பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
Comments