ஜம்மு காஷ்மீரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு
ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பத்து பேரின் உடல்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டன.
பல மணி நேரமாக வேதனையுடன் காத்திருந்த உறவினர்கள் உடல்களைப் பெற்றுக் கொண்டு கண்ணீர் வடித்தனர். 36 மணி நேர மீட்பு நடவடிக்கை இரவு பகலாக நீடித்து வந்தது.
நிலச்சரிவு காரணமாக சுரங்கத்தில் பணியாற்றிய 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 16 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments