பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம், உரமானியம் இரட்டிப்பு ஆகிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரி 6 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒன்பதரை ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையுமென அவர் கூறியுள்ளார். விலை குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் சுமையைக் குறைக்க அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாகக் கடந்த நவம்பர் மாதத்தில் குறைக்காத மாநில அரசுகள் இப்போது குறைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புப் பெற்ற 9 கோடிப் பயனாளிகளுக்கு இந்த ஆண்டில் ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் என்னும் அளவில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு எரிவாயு மானியம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆறாயிரத்து நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments