ரஷ்யாவின் தள்ளுபடி விலையால் சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி

0 4284
ரஷ்யாவின் தள்ளுபடி விலையால் சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி

உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் சீனா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதால், சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் ஈரான் சீனாவுக்கு ஒரு நாளைக்கு 7 இலட்சம் பீப்பாய் முதல் 9 இலட்சம் பீப்பாய் வரை எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. அதே நேரத்தில் சீனாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது.

இதன் விளைவாக 4 கோடிப் பீப்பாய் எண்ணெயுடன் ஈரானின் 20 எண்ணெய்க் கப்பல்கள் சிங்கப்பூர் கடற்பகுதியில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments