பட்டா மாற்றத்தில் முறைகேடு செய்ததாக துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் தற்காலிக பணி நீக்கம்

0 3120
பட்டா மாற்றத்தில் முறைகேடு செய்ததாக துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா மாற்றத்தில் முறைகேடு செய்ததாக துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெ.புதுக்கோட்டையில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு 200 ஏக்கர் நிலத்தை வாங்கி பின்னர் அதனை பயன்படுத்தாமல் விட்டுள்ளது.

அதில் 30 ஏக்கர் நிலத்தை சிலர் போலியாக பவர் பத்திரம் தயாரித்து விற்றதாகவும், அதற்கு மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிவகங்கை கோட்டாட்சியரிடம் அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் புகார் கொடுத்தார்.

விசாரணையில் தவறு உறுதியானதை தொடர்ந்து, துணை தாசில்தார் சேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments