பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சக மாணவர்களை அச்சுறுத்திய பள்ளி மாணவர்கள்

0 2997
பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சக மாணவர்களை அச்சுறுத்திய பள்ளி மாணவர்கள்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சக மாணவர்களை அச்சுறுத்தினர்.

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர்கள், தெருக்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதோடு, பள்ளி மைதானத்திலேயே அவர்கள் பந்தயம் நடத்தும் கூத்தும் அரங்கேறுகிறது.

மாணவர்களின் இதுபோன்ற செயல்களை கண்டிக்க முடியாமலும் தடுக்க முடியாமலும் பள்ளி நிர்வாகத்தினர் தடுமாறி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments