புதுவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் - தமிழிசை
புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தவும், பொதுமக்கள் பயனுறும் வகையில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பூங்காவை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், திரைத் துறையை சார்ந்த பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் மிக விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
Comments