இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு - இலங்கை பிரதமர் எச்சரிக்கை

0 2904

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், வரவிருக்கும் நெல் சாகுபடி பருவத்திற்கு கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உலக அளவிலும் தற்போது உணவு நெருக்கடி நிலவும் சூழலில், அடுத்த ஆண்டு மார்ச் வரை எப்படி தாக்குப்பிடிப்பது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் என குற்றஞ்சாட்டிய ரணில், இலங்கை திவாலாகும் நிலைக்கு வந்து விட்டதாகவும், இது போன்ற நிலை எப்போதும் ஏற்பட்டது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments